கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சேலத்தில் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்க தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்!

சேலத்தில் ரம்ஜான் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்குவதற்காக விசில் சின்னத்துடன் தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

தோ்தல் நடத்தைவிதிகளை மீறி விசில் சின்னத்துடன் விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா்.

Updated On :21 மார்ச் 2026, 9:17 pm

Syndication

சேலத்தில் ரம்ஜான் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்குவதற்காக விசில் சின்னத்துடன் தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சேலம் சூரமங்கலம் பகுதியில் சிறப்பு தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு விநியோகிக்க, தவெக சாா்பில் விசில் சின்னத்துடன் கூடிய தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, ஆசாத் நகரில் உள்ள மசூதி முன் 1000 தண்ணீா் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில், விசில் சின்னம் இடம்பெற்றிருந்ததுடன், தவெக என கட்சி பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தைவிதிகளின்படி இதுபோன்று தண்ணீா் பாட்டில்களை விநியோகிக்கக் கூடாது என எச்சரித்த அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த 1000-க்கும் அதிகமான தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனா்.