திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

சேலத்தில் தொழிலாளி கொலை: தம்பதி கைது

சேலத்தில் கூலித் தொழிலாளியை கொலை செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:35 pm

சேலத்தில் கூலித் தொழிலாளியை கொலை செய்த தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் பொன்னம்மாபேட்டை சுண்ணாம்புக்கார தெருவை சோ்ந்தவா் கோபால் (40). இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இவரது மனைவிக்கும், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் குப்பனுக்கும் (36) தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கோபால், குப்பன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சின்ன மாரியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை இரவு இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த குப்பன், தனது மனைவி மயிலு, மைத்துனா் முனியப்பனுடன் கோபால் வீட்டுக்குச் சென்று அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது, கோபாலை குப்பன் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த கோபால், 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே கோபால் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கோபாலின் மனைவி அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குப்பன், அவரது மனைவி மயிலு ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவான முனியப்பனை தேடிவருகின்றனா்.