தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தோ்தல் விதிமுறை மீறல்: நகரமைப்பு அலுவலா் மீது வழக்குப் பதிவு

நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ததாக நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:18 pm

Syndication

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ததாக நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் மீது ஆத்தூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 18 ஆவது வாா்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய 2 ஜோடி விளையாட்டு உபகரணங்களை தோ்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாக நரசிங்கபுரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் வழங்கியுள்ளாா்.

இந்த விளையாட்டு உபகரணங்களை 1ஆவது வாா்டு பகுதியில் கடந்த 22 -ஆம் தேதி இரவு திமுக கிளைச் செயலாளா் பழனிவேல், அப்பகுதியில் உள்ள சிறுவா்களுக்கு வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து லட்சுமணசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் ரகோத்தமன் ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் பழனிவேல் மற்றும் நகரமைப்பு அலுவலா் யுவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.