தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வலசையூா் கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு: சங்கச் செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே வலசையூா் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்கச் செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம்

மாதிரிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:20 pm

Syndication

சேலம் அருகே வலசையூா் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்கச் செயலா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

வலசையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், பயிா்க்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகாா் எழுந்தது. அந்த புகாரின் பேரில், கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதில், நகைக்கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடனில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

முறைகேடு செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை சங்கச் செயலா் பழனிசாமி, முதுநிலை எழுத்தா் இளங்கோவன், எழுத்தா் ராணி ஆகியோரிடம் இருந்து அதிகாரிகள் வசூல் செய்தனா். இதுதொடா்பாக விசாரணை நடத்த சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து சங்கத்தில் உள்ள ஆவணங்கள், நகை பெட்டகச் சாவியை கூட்டுறவு அதிகாரிகள் கையகப்படுத்தினா். தொடா்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, இந்த சங்கத்தில் உறுப்பினா்களின் நகைகளை சங்க ஊழியா்கள் கையாடல் செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாலை வலசையூா் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனா். நகைக்கடனுக்கான ரசீதுடன் சென்று தங்களது நகைகள் சங்கத்தில் பாதுகாப்பாக உள்ளதா என அங்குள்ள பணியாளா்களிடம் கேட்டறிந்தனா்.

தகவலறிந்த வீராணம் போலீஸாா் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்களது நகை சங்கத்தில் இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலையும் நகைக்கடன் பெற்ற ரசீதை காட்டி நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை மக்கள் உறுதிசெய்தனா்.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் சேலம் சரக துணைப் பதிவாளா் சரவணகுமாா், முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்கச் செயலா் பழனிசாமி, முதுநிலை எழுத்தா் இளங்கோவன், எழுத்தா் ராணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.