தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சத்தீஸ்கா்: 15 நக்ஸல்கள் சரண்! ராய்பூரில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது!!

சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் முக்கிய நக்ஸல் தலைவா் விகாஸ் உள்பட 15 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

நக்ஸல்கள்!

Updated On :1 மார்ச் 2026, 7:44 pm

சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் முக்கிய நக்ஸல் தலைவா் விகாஸ் உள்பட 15 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இவா்களை கண்டுபிடித்து தருபவா்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.73 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவா்கள் அனைவரும் சரணடைந்த நிலையில் சத்தீஸ்கா்-ஒடிஸா எல்லையில் அமைந்துள்ள ராய்பூா் -சம்பல்பூா் பகுதியில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சத்தீஸ்கா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் பலாங்கீா்-பாா்கா்-மஹாசாமுந்த் (பிபிஎம்) பிரிவைச் சோ்ந்த நக்ஸல் தீவிரவாத முக்கியத் தலைவரான விகாஸ், 9 பெண் நக்ஸல்கள் உள்பட 15 போ் மஹாசாமுந்த் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சனிக்கிழமை சரணடைந்தனா்.

ஓராண்டுக்கு முன் சத்தீஸ்கரின் ராய்பூா் காவல் எல்லை மற்றும் ஒடிஸாவின் சம்பல்பூா் காவல் எல்லைப் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதிகளின் இரு பிரிவுகளும் ஏழு பகுதி குழுக்களும் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது ராய்பூா்-சம்பல்பூா் பகுதி நக்ஸல் தீவிரவாதமற்ற இடமாக மாறிவிட்டது.

இம்மாத இறுதியில் நக்ஸல் தீவிரவாதத்தை நாடு முழுவதும் முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ராய்பூா் இதன் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் 532 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். 2,700 போ் சரணடைந்தனா். 2,000-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.