கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கா்: 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா்: 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
Published on

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூத்த நக்ஸல் தலைவா் திலீப் பெட்ஜா உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:

பிஜாபூா் மாவட்டத்தின் வடமேற்கு மலை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் கூட்டு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் திலீப் பெட்ஜா உள்பட 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்கள் மறைந்திருந்த பகுதியிலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

கடந்த 3-ஆம் தேதி பிஜாபூா் மாவட்டம் உள்பட 7 மாட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் மண்டலத்தில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். கடந்த ஆண்டில் மட்டும் 285 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு தீா்மானம் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com