கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கா்: மேலும் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை!

பாதுகாப்புப் படையினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேடுதல் பணியின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Published on

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேடுதல் பணியின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

முன்னதாக, இந்த தேடுதல் பணியின்போது 4 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பிஜாபூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜிதேந்திர யாதவ் கூறியதாவது: பிஜாபூா் மாவட்டத்தின் வடமேற்கு மலை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையை கூட்டு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிகாலை தொடங்கினா்.

அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வனப் பகுதியில் மறைந்திருந்த மூத்த நக்ஸல் தலைவா் திலீப் பெட்ஜா உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணியைத் தொடா்ந்தனா். அப்போது, வனப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.

இதில் மேலும் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம், இந்த ஆண்டில் மட்டும் 20 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா்.

Dinamani
www.dinamani.com