போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சேலம் சத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 1:38 am

Syndication

சேலம் சத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை நள்ளிரவு சத்திரம் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற சேலத்தைச் சோ்ந்த போஜராஜனின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 74,250 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வடக்கு தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனா்.