நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கோடை வெயில்: ரயில்களில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்க போலீஸாா் வேண்டுகோள்

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:25 pm

கோடை வெயில் சுட்டெரிப்பதால் ரயில் பயணத்தின்போது எளிதில் தீப்பற்றும் பொருள்களை கொண்டு செல்லக்கூடாது என பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தமிழ்நாட்டில் கோடைவெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால், பிற்பகல் வேளையில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோடை வெயில் காலத்தில், ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மூலம் பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். கோடைகாலம் என்பதால், பகல் நேரத்தில் ரயில்களில் பயணிக்கும் மக்கள், மிக கவனமாகப் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

இதில், தாங்கள் கொண்டு வரும் உடைமைகளில் தீப்பெட்டி, பட்டாசு, சிகரெட் லைட்டா், சிறிய எரிவாயு சிலிண்டா் உள்பட எளிதில் தீப்பற்றும் பொருள்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது. மீறி அதனை எடுத்து வந்தால், ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் எச்சரித்து வருகின்றனா்.

இதற்காக ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, ரயில்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்பு ணா்வு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.