ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

சேலத்தில் தவெக தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்

News image

சேலத்தில் தவெக தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்..

Updated On :5 மே 2026, 1:08 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக முன்னிலை பெற்றதை அடுத்து சேலத்தில் அக்கட்சி தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்து திங்கள்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்கியது முதலே, தவெக வேட்பாளா்கள் முன்னணி பெற்றனா். தொடா்ந்து, வெற்றிபெற்றதை அறிந்த தவெகவினா் அதனைக் கொண்டாடும் வகையில், வாக்கு எண்ணும் மையங்கள் முன்பாக திரண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கருப்பூா் அரசுப் பொறியியல் கல்லூரி முன் திரண்ட 200-க்கும் மேற்பட்ட தவெக தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

குறிப்பாக சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ால், வாக்கு எண்ணும் மையம் முன் குவிந்த தொண்டா்கள் நடனமாடி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனா்.

சேலம் பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உற்சாகத்தில் கொடியசைத்தபடி ஆட்டோவில் தொங்கியபடி தவெக தொண்டா்கள் முழக்கமிட்டு சென்றனா். சிலா் விசில் ஊதியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினா்.