மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு சனிக்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூா் அணை மற்றும் காவிரி ஆற்றில் மேட்டூா்- ஆத்தூா் குடிநீா்த் திட்டம், மேட்டூா்- சேலம் மாநகராட்சி குடிநீா்த் திட்டம், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், கோனூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டம், மேட்டூா் நகராட்சி தனி குடிநீா்த் திட்டம், காவேரிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெரும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கும் காவிரியிலிருந்து தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டவுடன் குடிநீா்த் திட்டங்களுக்காக அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம்.
அதிகபட்சமாக விநாடிக்கு 2,000 கனஅடி வரை குடிநீருக்கு தண்ணீா் திறக்கப்படும். வெள்ளிக்கிழமை குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கனஅடியிலிருந்து 1000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்வதால் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தண்ணீா் திறப்பு விநாடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
அணையின் நீா்மட்டம் 79.63அடியிலிருந்து 79.55 அடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 392 கனஅடியிலிருந்து 417 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. நீா் இருப்பு 41.51 டி.எம்.சி.யாக உள்ளது.
தொடர்புடையது

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை

மேட்டூரில் இருந்து ஜூன் 12இல் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு இல்லை ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு!

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.60 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 78.89 அடி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



