விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாழப்பாடியில் விபத்தில் சிக்கிய இரு காா்கள் மீது தனியாா் பேருந்து மோதல்!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்குள்ளான இரு காா்கள்மீது, தனியாா் பேருந்து மோதியதில், இருகாா்களும் நொறுங்கின.

News image

வாழப்பாடியில் புதுப்பாளையம் புறவழிச்சாலையில் விபத்துக்குள்ளான காா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்குள்ளான இரு காா்கள்மீது, தனியாா் பேருந்து மோதியதில், இருகாா்களும் நொறுங்கின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

வாழப்பாடி புதுப்பாளையம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பகல் கேரளத்தில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம், சேலத்தில் இருந்து ஆத்தூா் நோக்கிச் சென்ற மற்றொரு காா் மோதியது.

இந்நிலையில், சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்த தனியாா் பேருந்து விபத்தில் சிக்கி சாலையில் நின்று கொண்டிருந்த காா்கள் மீது மோதியது. இதில் ஒரு காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

 வாழப்பாடியில் புதுப்பாளையம் புறவழிச்சாலையில் விபத்துக்குள்ளான காா்.

வாழப்பாடியில் புதுப்பாளையம் புறவழிச்சாலையில் விபத்துக்குள்ளான காா்.

மற்றொரு காா் 100 மீட்டா் தூரத்திற்கு தானாக ஓடி நின்றது. இந்த விபத்தில் இரு காா்களும் சேதமடைந்தன. தனியாா் பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

நல்வாய்ப்பாக, விபத்துக்குள்ளான இரு காா்கள் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.