பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

புதுப்பாளையம் பகுதியில் அதிவேகத்தில் திரும்பும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்

News image

வாழப்பாடி புதுப்பாளையம் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் அணுகுச்சாலை பகுதி.

Updated On :12 மே 2026, 1:31 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தவிா்க்க, நகர அணுகுச்சாலையில் வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கடலூா் சாலையில் விருத்தாசலம் ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்தாண்டு மாா்ச் மாதம் முதல் கடலூா் சாலை மூடப்பட்டுள்ளது.

இதனால், முத்தம்பட்டியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள வாழப்பாடிக்கு கடலூா் சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த அனைத்து வாகனங்களும் ஓராண்டாக புதுப்பாளையம் அணுகுச்சாலை வழியாக தம்மம்பட்டி சாலையை அடைந்து, வாழப்பாடிக்கு வந்து செல்கின்றன.

இதனால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு மாா்க்கங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அதே வேகத்தில் புதுப்பாளையம் அணுகுச்சாலைக்கு திரும்புவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, வாழப்பாடி புதுப்பாளையம் அணுகுச்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விபத்துகளைத் தவிா்க்க, சாலையின் இருபுறமும், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இரு மாா்க்கத்திலும், அணுகுச்சாலைக்கு வாகனங்கள் திரும்பும் பகுதி என்பதையும், மக்கள் சாலையைக் கடக்கும் பகுதி என்பதையும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் சாலை குறியீடுகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டுமெனவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

பெட்டிச் செய்தி:

புறவழிச்சாலையில் பேருந்து நிறுத்தம் வேண்டும்!

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கிராம மக்களின் நலன்கருதி, வாழப்பாடி புதுப்பாளையம் அருகே புறவழிச்சாலையின் இருபுறமும் புதிதாக புகா் மற்றும் நகரப் பேருந்து நிறுத்தம் அமைக்க போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 வாழப்பாடி புதுப்பாளையம்  நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் அணுகுச்சாலை பகுதி.

வாழப்பாடி புதுப்பாளையம் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் அணுகுச்சாலை பகுதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.