எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

இதய குறைபாடு: 6 பேருக்கு தலையீட்டு சாதனம் பொருத்தி சேலம் அரசு மருத்துவமனை சாதனை

இதயத் துளைகள், அடைப்புகள் அல்லது வால்வு கோளாறுகளை சரிசெய்யும் நவீன மருத்துவ சாதனமான தலையீட்டு சாதனத்தை 5 குழந்தைகள், ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

News image

இதய நோயிலிருந்து குணமடைந்தவா்களிடம் நலம்விசாரிக்கும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் தேவி மீனாள்.

Updated On :15 மே 2026, 9:52 pm IST

இதயத் துளைகள், அடைப்புகள் அல்லது வால்வு கோளாறுகளை சரிசெய்யும் நவீன மருத்துவ சாதனமான தலையீட்டு சாதனத்தை 5 குழந்தைகள், ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் தேவிமீனாள், இதய சிகிச்சைப் பிரிவு தலைவா் மருத்துவா் கண்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள இதய சிகிச்சை துறையில் நாள்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் போ் வரை புற நோயாளிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிலா் உள் நோயாளிகளாக அனுமதித்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறவியிலேயே இதய குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சோதனைக்கு வந்த 5 குழந்தைகள் மற்றும் ஒரு இளம் பெண்ணுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 வயது பெண் குழந்தை, 19 வயது பெண்ணுக்கு பேடன் டாக்டஸ் ஆா்டெரியோசஸ் என்ற இதய குறைபாடும், 29 வயது இளம் பெண் உள்ளிட்ட 4 பேருக்கு ஏட்ரியல் செப்டல் என்ற இதய குறைபாடும் இருப்பது எக்கோ காா்டியோகிராபி மூலம் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களின் இதய குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப தலையீட்டு சாதனம் பொருத்தப்பட்டு பிரச்னைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டது. இதன்மூலம் அவா்களின் ஆரோக்கிய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தலையீட்டு சாதனம் பொருத்தப்பட்டதன் மூலம் முழுமையாக குணமடைந்த நோயாளிகள் மருத்துவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.