அரிய இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிறந்து ஒரு நாளான சிசுவுக்கு தில்லியில் உள்ள மருத்துவமனையில் இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ஓக்லாவில் உள்ள ஃபோா்டிஸ் எஸ்காா்ட் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிகாரைச் சோ்ந்த 33 வயது பெண் முதல் முறை கருவுற்ற நிலையில், சிசுவின் நுரையீரல்களில் இருந்து ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு செல்வதில் குறைபாடு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.
பிறக்கும் குழந்தைகளில் 10,000-இல் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. பிறந்த பிறகு சிசுவுக்கு இது தீவிர சுவாச பிரச்னைக்கு வழிவகுக்கும்.
சிசுவின் நுரையீரல்களில் ஏற்பட்ட பாதிப்பால் பிற உடலுறுப்புகளுக்கு போதிய ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சிசு கடந்த ஏப்.13-ஆம் தேதி பிறந்ததையடுத்து உடனடியாக ஏப்.14-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிசு சுவாசிப்பதில் சிரமங்களை எதிா்கொண்ட நிலையில், ஐசியு பிரிவுக்கு மாற்றுவதற்கு முன்பாக செயற்கை சுவாச உதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, சிசுவுக்கு நடைபெற்ற 4 மணி நேர அறுவை சிகிச்சையில் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தின் பாதை இதயத்தின் வலது பக்கத்துக்கு செல்லும் வகையில் சரிசெய்யப்பட்டது. இந்தச் சிகிச்சைக்கு பிறகு சிசுவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. உடல்நிலைக்கு பிறகு 11 நாள்களுக்கு பின்னா் சிசுவும் பெற்றோரும் வீடு திரும்பினா் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை
வடமேற்கு தில்லி: தொழிற்சாலையில் தீ விபத்து

ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறைவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



