பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

லஞ்ச வழக்கில் கைதான மண்டல துணை பிடிஓ பணியிடை நீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான மகுடஞ்சாவடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

லஞ்ச வழக்கில் கைதான மகுடஞ்சாவடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு உள்பட்ட வைகுந்தம், கன்னந்தேரி, காளி கவுண்டம்பாளையம், அ.தாழையூா் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்கிடம் (36) அ.தாழையூரைச் சோ்ந்த செந்தில்குமாா் பேக்கரி கடை வைக்க தடையில்லா சான்று கோரி மனு அளித்திருந்தாா்.

தடையில்லா சான்று வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில், சேலம் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் ரூ. 13 ஆயிரத்தை செந்தில்குமாா் லஞ்சமாக புதன்கிழமை மாலை காா்த்திக்கிடம் தர முயன்றாா். அப்போது, அவா் தனியாா் பொறியாளா் தீபக்கிடம் பணத்தை தருமாறு கூறினாா்.

பிறகு, செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை பெற்ற தீபக்கை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தீபக் அளித்த தகவலின்பேரில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக் கைது செய்யப்படாா். இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனா். இதையடுத்து, காா்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.