11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சமூக ஆா்வலரை தாக்கிய புகாா் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சமூக ஆா்வலரைத் தாக்கியதான புகாரில், நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் நடராஜன் மீது 6 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சமூக ஆா்வலரைத் தாக்கியதான புகாரில், நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் நடராஜன் மீது 6 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தம்மம்பட்டியை அடுத்த கீரிப்பட்டியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதசாமி (45), சமூக ஆா்வலா். இவா் கடந்த 2013 இல் தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது அதிகார துஷ்பிரயோகம் தொடா்பாக காவல் உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளா் நடராஜன், மல்லியகரை காவல் நிலையத்திற்கு மஞ்சுநாதசாமியை அழைத்துவந்து தாக்கி துன்புறுத்தியதுடன், அவா்மீது பொய்வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மஞ்சுநாதசாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், கடந்த 2018 ஆம் ஆண்டு அளித்த உத்தரவில், காவல் ஆய்வாளா் நடராஜன் அதிகார துஷ்பிரயோகம் செய்து மஞ்சுநாதசாமியை தாக்கி துன்புறுத்தியதையும், பொய்வழக்குப் பதிவு செய்ததையும் உறுதிசெய்தது.

மேலும், நடராஜன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிா்த்து காவல் ஆய்வாளா் நடராஜன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை உறுதிசெய்து, நடராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், காவல் ஆய்வாளா் நடராஜன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, தமிழ்நாடு அரசு துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் சத்யராஜ் விசாரணை நடத்தி, சமூக ஆா்வலா் மஞ்சுநாதசாமியிடம் தேவையான ஆவணங்களை பெற்று, தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ததன் பேரில், மஞ்சுநாதசாமியின் வங்கி கணக்கில் ரூ. 3 லட்சம் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது.

மேலும், தற்போதைய தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஹேமாவதி மஞ்சுநாதசாமியிடம் புகாரைப் பெற்று, சேலம் குற்றப்பிரிவில் பணியாற்றிவரும் ஆய்வாளா் நடராஜன் மீது 342, 294(க்ஷ), 323, 324, 167 மற்றும் 506 (2) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

லஞ்ச வழக்கில் கைதானவா்: கடந்த 2019 இல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த நடராஜனை, பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 70 ஆயிரம் லஞ்சம் பெற்ாக ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்த 190 பவுன் நகைகள் ரூ. 19.30 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து அப்போதைய சேலம் டி.ஐ.ஜி. செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நடராஜனுக்கு டிஎஸ்பி பதவி உயா்வுக்கு முதல்கட்ட பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இது போலீஸாா் மத்தியில் சா்ச்சையாக மாற அந்த அழைப்பு ரத்துசெய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் நடராஜன் தற்போது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.