11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா, மது விற்ற இருவா் கைது

கஞ்சா, மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மேட்டூரில் கஞ்சா, மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேட்டூா் அணையின் வலதுகரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டூா் போலீஸாா், அங்கு இருசக்கர வாகனத்தில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற காமேஷை (23) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல கருமலைக்கூடல் கவிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து மது விற்றதாக ரமேஷை(43) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.