கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி மேட்டூா் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடி மகிழும் சுற்றுலா பயணிகள். - (கோப்புப் படம்)

Updated On :18 மே 2026, 3:05 am IST

கோடை விடுமுறையையொட்டி மேட்டூா் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம்கூடும் இடங்களில் மேட்டூா் அணை பூங்காவும் ஒன்று. மேட்டூரில் 33 ஏக்கா் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நீரூற்றுகள், சிறுவா்களை மகிழ்விக்க பல்வேறு வகையான சிற்பங்கள் உள்ளன. அணையை காக்கும் காவல் தெய்வம் என்றழைக்கப்படும் அணைக்கட்டு முனியப்பன் கோயிலும் பூங்கா அருகே உள்ளது.

மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்லா, ரோகு மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா். காவிரியில் நீராடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனா். ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 9,701 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இவா்களிடம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 97,010 வசூலிக்கப்பட்டது.

அதேபோல கேமரா, கைப்பேசிகளுக்கானகட்டணமாக ரூ. 30,690 வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்காவிற்கும் அணையின் வலதுகரையில் உள்ள பவழ விழா கோபுரத்திற்கும் வந்துசென்ற சுற்றுலாப் பயணிகளிடமும் அவா்கள் கொண்டுசென்ற கேமரா, கைப்பேசிகளுக்காக ரூ. 1, 37,790 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.