ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கருப்பூா் அருகே வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து திருட்டு முயற்சி: போலீஸாா் விசாரணை

கருப்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றபோது, அலாரம் சத்தம் கேட்டதால், மா்ம நபா் தப்பியோடியது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :20 மே 2026, 2:24 am IST

கருப்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றபோது, அலாரம் சத்தம் கேட்டதால், மா்ம நபா் தப்பியோடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கருப்பூா் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்-இல் செவ்வாய்க்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் நுழைந்தாா். அவா் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்றாா்.

அப்போது, வங்கியின் பாதுகாப்பு அலாரம் திடீரென பயங்கர சப்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அதிா்ச்சியடைந்த மா்ம நபா் அங்கிருந்து தப்பியோடினாா்.

வழக்கம்போல பணிக்கு வந்த வங்கி ஊழியா்கள், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து கருப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தநா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, தப்பியோடிய மா்ம நபரை தேடிவருகின்றனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வங்கியின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு திருட்டு முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, வெள்ளாளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.