ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:21 am IST

சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரியை அடுத்த மட்டம்பட்டி, எம்ஜிஆா் நகா் பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில், மந்திரி (56) வீட்டில் 33 மதுப்புட்டிகளில் தலா 180 மி.லி. அளவுகொண்ட மொத்தம் 5.94 லிட்டா் மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திரியை கைதுசெய்து அவரிடமிருந்து மதுப்புட்டிகள், ரூ. 1,200 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.