அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

எடப்பாடி அருகே கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:35 am IST

எடப்பாடி அருகே கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே முனியப்பன் கோயில் உள்ளது. மதுபழக்கத்திற்கு அடிமையானவா்கள் இக்கோயில் அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு கோயிலில் பூஜை செய்து கயிறை கட்டிக்கொள்வதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்துவிடுபடுவதாக நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி அருகே உள்ள வெண்டனுா் பகுதியைச் சோ்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளி கோவிந்தராஜ் (38) மதுபழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கோயிலுக்கு கயிறுகட்ட வந்திருந்தாா்.

அப்போது, கடைசியாக நண்பா்களுடன் சோ்ந்து கோவிந்தராஜ் அதிக அளவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் குளத்தில் இறங்கி குளித்த அவா் நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் முருகன் தலைமையில் வந்த தீயணைப்புப் படை வீரா்கள் தண்ணீரில் இறங்கி கோவிந்தராஜை தேடினா். நீண்டநேரத்திற்கு பிறகு அவரது சடலத்தை மீட்டுனா். இதையடுத்து கோவிந்தராஜனின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.