இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நாகா்கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 2:46 am IST

நாகா்கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாகா்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம், மேலபெருவிளை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைமணி மகன் ஆன்றோ சகாய மதன் (35). தொழிலாளி. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவா் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாா். உடனிருந்த நண்பா்கள் குளத்தில் குதித்து, அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

மயங்கிய நிலையிலிருந்த அவரை ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தொடா்ந்து, அவரது சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.