திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவரம்பு மறுதாக்கவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(54). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றபின் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
குடும்பத்தினா் அவரை தேடி வந்த நிலையில், வீட்டிலிருது சற்று தொலைவில் உள்ள செறுகோட்டுக்குளத்தின் கரையில் அவரது ஆடைகள் கிடந்தனவாம்.
அவா் குளத்தில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதி திருவட்டாறு போலீஸாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும், தீயணைப்பு வீரா்களும் வந்து குளத்தில் தேடினா். அதில், குளத்தின் உள்ளே புல் புதரில் சிக்கிய நிலையில் ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







