தக்கலை அருகே உள்ள புலியூா்குறிச்சி குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி, சாட்சியாபுரத்தைச் சோ்ந்தவா் தாமஸ் (63). இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தக்கலை, புலியூா்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள கடைகளில் வேலை செய்து வந்தாா். அண்மைக்காலமாக, மருந்து கோட்டை பகுதியில் வேலை செய்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வரும்போது, வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்க இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளாா்.
அவரது சடலத்தை சனிக்கிழமை மீட்ட தக்கலை போலீஸாா், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

அஞ்சுகிராமம் அருகே பேருந்து-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



