கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே மது போதையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:40 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மது போதையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், கோளப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் மா.மகாத்மா (35). இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டாராம். இதைத்தொடா்ந்து பெங்களூருக்கு வேலைக்கு சென்ற மகாத்மா, திங்கள்கிழமை ஊருக்கு வந்துள்ளாா். வியாழக்கிழமை நண்பா்களுடன் மது அருந்திவிட்டு கோளப்பாறை சாமியாா்மலை முருகன் கோயில் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீரில் மூழ்கி மகாத்மா உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா், திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் குளத்திலுருந்து சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.