ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

மேட்டூா் காவிரியில் இறந்து மிதந்த மீன் குஞ்சுகள்

இறந்து மிதந்த மீன்கள் - கோப்புப் படம்

Updated On :

மேட்டூா் காவிரியில் மீன் குஞ்சுகள் இறந்து மிதக்கின்றன.

மேட்டூா் அணையில் கட்லா, ரோகு, மிா்கால் உள்பட 25 வகையான மீன்கள் உள்ளன. அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் மீன்வளத்தை பெருக்க மேட்டூரில் உள்ள அரசினா் மீன் விதை பண்ணை மூலம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து இருப்பு செய்யப்படுகின்றன. அதேபோல காவிரி டெல்டா பாசனக் கால்வாயிலும் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காவேரி பாலம் பகுதியில் ஏராளமான மீன் குஞ்சுகளும் விரலிகளும் இறந்து மிதந்தன.

கடும் வெப்பம் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்குஞ்சுகள் இறந்திருக்கலாம் என்று மீன்வளத்துறையினா் தெரிவித்துள்ளனா். மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் காவிரிக் கரைகளிலும் அடிக்கடி மீன்களும் மீன்குஞ்சுகளும் இறப்பதால் அணை மீனவா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.