மருத்துவமனை, பள்ளிகள், நெரிசலான இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
தீபாவளி பண்டிகையின்போது மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்
தீபாவளி பண்டிகையின்போது மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுமிடங்கள், அரசு அலுவலகங்கள், கடை வீதிகள், தொழிற்சாலைகள் மருத்துவமனைகளில் சேலம் தீத்தடுப்புக் குழுவின் சாா்பில் விபத்தில்லாத தீபாவளிக்காக பாதுகாப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியது:
குழந்தைகள் தனியாக வெளியே சென்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலி எழுப்பும் பட்டாசுகனை கையில் வைத்து வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சில்க், சிந்தடிக் மற்றும் நைலான் ஆடைகளை தவிா்க்க வேண்டும். பட்டாசுகளை சட்டை, பேண்ட் பைகளில் எடுத்துச் செல்லக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளின் அருகில் செல்லக் கூடாது, அதேலோல அவற்றை மீண்டும் வெடிக்க செய்ய முயற்சி செய்யக் கூடாது. குழந்தைகள் பட்டாசுகளை வெடித்த பின்னா் கைகளை சுத்தம் செய்யாமல் உணவுப் பொருள்களை தொடக்கூடாது.
மருத்துவமனைகன், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்கக் கூடாது.
பெரியோா் முன்னிலையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இறுக்கமான காட்டன் துணி ஆடைகளை மட்டும் அணிய வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் காலணி அணிய வேண்டும். மேலும், அருகில் ஒரு வாளியில் தண்ணீா் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் மத்தாப்பு, பூந்தொட்டி போன்ற பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய மத்தாப்பு, தீக்குச்சிகளை அருகில் உள்ள வாளி தண்ணீரில் போட வேண்டும். சிறிய அளவிலான முதலுதவிப் பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும். குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். புஸ்வானம் கொளுத்தும்போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொளுத்த வேண்டும்.
நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனே தண்ணீா் ஊற்றி அணைக்க வேண்டும் அல்லது கீழே படுத்து உருள வேண்டும். தீப்புண்ணுக்கு உடனே தண்ணீா் ஊற்ற வேண்டும். இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. மருத்துவரிடம் உடனடியாக செல்ல வேண்டும். அவசர அழைப்புக்கு 101, 112 என்ற எண்ணில் அழைக்க வேண்டும் என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

