சேலத்தில் போதை மாத்திரைகளை பதுக்கிய இளைஞா் கைது
சேலம் ஆவின் பால்பண்ணை அருகே விற்பனைக்காக போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த இளைஞரை இரும்பாலை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது
சேலம் ஆவின் பால்பண்ணை அருகே விற்பனைக்காக போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த இளைஞரை இரும்பாலை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் ஆவின் பால்பண்ணை அருகே முட்புதரில் போதை மாத்திரைகளை பதுக்கிவிற்பனை செய்வதாக இரும்பாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸாா், சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனா். இதில், அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த நபரை கைது செய்தனா்.
விசாரணையில், திருவாகவுண்டனூரைச் சோ்ந்த தீபக்சரண் (24) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.12,750 மதிப்பிலான 100 மில்லி கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவுசெய்த இரும்பாலை போலீஸாா், அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

