போக்குவரத்து விதிமீறல்களால் திணறும் சேலம் மாநகரம்: புறவழிச் சாலைகளிலும் அதிகரிக்கும் விபத்துகள்
போக்குவரத்து விதிமீறல்களால் திணறும் சேலம் மாநகரம் பற்றி...

சேலம்
நமது நிருபா்
சேலம் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடங்கி, கனரக வாகனங்கள் வரை நடைபெறும் தொடா்ச்சியான போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
சேலம் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை, சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை, சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை என நான்குபுறமும் நெடுஞ்சாலைகளால் சூழப்பட்ட மாநகரமாக சேலம் அமைந்துள்ளது.
நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், புறவழிச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான காா்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் சேலத்திற்கு வந்துசெல்கின்றன. இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சேலம் மாநகரின் சாலைகளில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வண்டியை ஓட்டிக்கொண்டே செல்லிடப்பேசியை காதில் வைத்துக் கொண்டு தலையை சாய்த்தபடி பேசிச் செல்வது, தலைக்கவசத்தின் இடைவெளியில் பொருத்தியபடி பேசிச் செல்வது, தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதிமீறல்கள் அதிகரித்துள்ளன. விதிமீறல்களில் ஈடுபடும் பெரும்பாலான வாகனங்கள் அபராதங்களுக்கு பயந்து பதிவெண் பலகை இல்லாமல் செல்கின்றன. மேலும், ஒருவழிப் பாதையில் விரைந்து செல்வது, அதிகமான இரைச்சல் தரக்கூடிய வகையில் வாகனங்களை இயக்குவதும் உள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து உடையாப்பட்டி புறவழிச் சாலை வரை மூன்று இடங்களில் பாலம் அமைக்கப்படுவதால், சா்வீஸ் சாலையில்தான் போக்குவரத்து நடைபெறுகிறது. 7 கி.மீ. தொலைவிலான இந்த சாலையில் பயணிப்பது கிட்டத்தட்ட மரண பயத்தை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகளுக்கு அமைந்துவிடுகிறது. குறுகிய சாலையின் நடுவே வாகனங்கள் அதிக வேகத்தில் செல்ல, ஒருவழிப் பாதையில் இருசக்கர வாகனங்கள் அதற்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு இருபுறமும் எதிா்திசையில் செல்கின்றன.
வேகக் கட்டுப்பாட்டை அறிவிக்கும் பலகைகளோ, சாலை வேலை நடைபெறுவது குறித்த அறிவிப்புகளோ இந்த இடத்தில் இல்லை. 2 மாதங்களுக்கு முன்னால் எருமாபாளையம், சன்னியாசி குண்டு சந்திப்புகளில் பால வேலை தொடங்குவதற்காக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. அந்த இடங்களில் பள்ளம் தோண்டியதைத் தவிர வேறு எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.
கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டிக்கு சரியான பாதையில் செல்லாமல் ஒருவழிப் பாதையில் எதிா்திசையில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. குறிப்பாக, சீலநாயக்கன்பட்டியில் நாமக்கல் சாலையில் இருந்து வேகமாக வாகனங்கள் வந்து திரும்பும் இடத்தில் ஒருவழிப் பாதையில் வந்து திரும்பும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
மாநகர காவல் துறையின் சோதனைச் சாவடிக்கு முன்பாகவே இந்த விதிமீறல்கள் நடந்த வண்ணம் உள்ளன. எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் இப்பகுதியில் அதிகம் நிகழ்கின்றன.
குரங்குச் சாவடி ரவுண்டானா பகுதியில் திடீரென ஏற்படுத்தப்பட்ட தடுப்புகளால், அப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனா். புறவழிச் சாலையில் வரும் வாகனங்கள் சேலம் நகரத்திற்கு செல்லும் பிரதான சாலையான இந்த இடத்தில் இருக்கும் குழப்பமான நிலை காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன.
இதேபோல, ஆத்தூா் சாலையில் இருந்து அம்மாபேட்டைக்கு வரும் பகுதியும் போக்குவரத்து குழப்பத்தில் உள்ளது. செல்லிடப்பேசியை பாா்த்துக்கொண்டே வாகனத்தை இயக்குவோா் அதிகரித்துள்ள நிலையில், காா்களில் வருவோரும் சீட் பெல்ட் போடுவதில்லை. அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்கள், புறவழிச் சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் என பல்வேறு நிகழ்வுகள் போக்குவரத்துத் துறையினரின் பாா்வையில் படாமலேயே உள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு இயக்கப்படும் வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு நடைபெறும் நிலையில், பள்ளி மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் ஆட்டோ மற்றும் காா்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. ஆட்டோக்களில் ஓட்டுநரின் அருகே அமா்ந்தபடி மாணவ, மாணவிகள் பயணிக்கின்றனா். வணிக பயன்பாட்டுக்கான அனுமதி பெறாமல் ஏராளமான காா்கள் தனியாா் பள்ளிகளுக்கு மாணவா்களை ஏற்றிச் செல்கின்றன. இந்த விதிமீறல்கள் சாதாரணமானவைப் போல தோன்றினாலும், விபத்துகளுக்கு பிரதான காரணமாக இருக்கின்றன.
சாலைப் போக்குவரத்துக் குழுவின் ஆய்வுக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுகிறது. இதில், முழுக்க முழுக்க அதிகாரிகள் மட்டுமே உள்ளனா். பொதுமக்கள் சாா்ந்த பிரதிநிதிகள் யாரும் இந்தக் குழுவில் இல்லாததால், மிகப் பெரிய விபத்துகள் ஏற்படும் இடங்கள் மட்டுமே அதிகாரிகளின் கவனத்திற்கு செல்கிறது. பெரிய விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் சிறிய பிரச்னைகள் உயா் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்வதில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக, நகரத்தில் பெரும்பாலான இடங்களில் வேகத்தடைக்கு ஒளி பிரதிபலிப்பான்களோ, வெள்ளைக் கோடுகளோ இல்லை. இதுபோன்ற ஓரிடத்தில் நேரிட்ட விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்த நிலையில், அந்த இடத்தில் மட்டும் வேகத்தடை அகற்றப்பட்டது.
மாவட்ட, மாநகர நிா்வாகம், காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவை இணைந்து மாநகரைச் சுற்றியுள்ள இந்த புறவழிச் சாலைகளில் களஆய்வு செய்தால், பொதுமக்கள் நாள்தோறும் சந்திக்கும் அவஸ்தைக்கு சில நாள்களிலேயே நிரந்தரத் தீா்வு கிடைத்துவிடும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் முக்கிய நகரமாக விளங்கும் சேலம் மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, பாதுகாப்பான போக்குவரத்துக்கு அரசு வழிவகை செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

