அரூரில் புறவழிச் சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி தொடக்கம்
அரூரில் புறவழிச் சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அரூரில் புறவழிச் சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் திருப்பத்தூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, அரூா் - தருமபுரி நெடுஞ்சாலை, திருவண்ணாமலை நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளை இணைக்கும் பகுதியாக அரூா் உள்ளது.
அரூா் வழியாக நாள்தோறும் ஏராளமான அரசு, தனியாா் பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை, வேலூா், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக அரூா் உள்ளது.
இந்நிலையில், அரூா் நகா் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், வணிகா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, அரூா் நகருக்கு வெளியே புறவழிச் சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, புறவழிச் சாலை அமைக்க தேவையான நிலங்களை வருவாய்த் துறையினா் அடையாளப்படுத்தியுள்ளனா். தற்போது, வெளிவட்டச் சாலை அமைக்க தேவையான இடங்களை வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.
அரூரில் அமைக்கப்படும் புறவழிச் சாலையானது செக்காம்பட்டி தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அருகே தொடங்கி ராயப்பன்கொட்டாய், நாசன்கொட்டாய், அம்பேத்கா் நகா், பழையபேட்டை தனியாா் கலை, அறிவியல் கல்லூரி வழியாக அரூா் பெரிய ஏரி அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் வந்து சேரும் வகையில் அமைய உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

