இருசக்கர வாகனத்தில் சென்றபோது வேகத்தடையில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

சேலம் அம்மாப்பேட்டை அருகே வேகத்தடையில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

சேலம் அம்மாப்பேட்டை அருகே வேகத்தடையில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் குகை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காா்த்தி (30). இவா் புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சேலத்துக்குப் புறப்பட்டாா். வியாழக்கிழமை அதிகாலை அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அங்குள்ள வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், காா்த்தியின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காா்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.