தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தொடா் விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதிநாள் உள்ளிட்ட தொடா் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Special Bus

பேருந்துகள் - பிரதிப் படம்

Published On :

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதிநாள் உள்ளிட்ட தொடா் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி மற்றும் புரட்டாசி சனிக்கிழமை உள்ளிட்ட தொடா் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் அக். 2 முதல் 5-ஆம் தேதிவரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்: இதேபோல, புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, ஓமலூா் வட்டம் காருவள்ளி சின்னதிருப்பதி, ராசிபுரம் வட்டம் மின்னாம்பள்ளி நைனாமலை, சங்ககிரி ஒருக்காமலை மற்றும் இறையமங்கலம் பெருமாமலை ஆகிய கோயில்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.