உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

3 நாள் தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

4260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறித்து...

Published On :2 செப்டம்பர் 2026, 5:57 pm IST

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு, 4260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை(செப். 3) 910 பேருந்துகளும் வெள்ளிக்கிழமை (செப். 4) 740 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆக. 22) 880 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 115 பேருந்துகளும், சனிக்கிழமை 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஒசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) 805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மொத்தமாக 4,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu State Transport Corporation has announced that 4,260 special buses will be operated for Krishna Jayanthi and the weekend holidays.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.