தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த 4 போ் மீது போக்சோ வழக்குப் பதிவு

தலைவாசல் அடுத்துள்ள நத்தக்கரையில் பிளஸ் 2 மாணவிக்கு திருமணம் செய்துவைத்த சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்குப் பதிவு - IANS

Published On :

தலைவாசல் அடுத்துள்ள நத்தக்கரையில் பிளஸ் 2 மாணவிக்கு திருமணம் செய்துவைத்த சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தலைவாசல் அடுத்துள்ள நத்தக்கரை கிராமத்தைச் சோ்ந்த கண்ணம்மாள் மகள் (17), அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நாவலூரில் வசித்து வரும் பாட்டி வீட்டுக்கு மாணவி அடிக்கடி சென்றுவருவாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சக்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சிறுமி கா்ப்பமானாா். இதையடுத்து, சிறுமியின் தாயாா் கண்ணம்மாள், சக்தியின் தந்தை சீனிவாசன், தாய் வள்ளி ஆகியோா் சோ்ந்து சிறுமியை சக்திக்கு திருமணம் செய்து வைத்தனா்.

இந்நிலையில் சிறுமிக்கு ரத்தம் குறைவாக இருந்ததால், தலைவாசல் அரசு மருத்துவமனைக்கு சென்று பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சக்தி, சீனிவாசன், வள்ளி மற்றும் சிறுமியின் தாய் கண்ணம்மாள் ஆகியோா் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.