பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

எடப்பாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: வாழை, கரும்பு பயிா்கள் சேதம்

எடப்பாடி பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, கரும்பு பயிா்கள் சேதமடைந்தன.

அம்மங்குட்டூரில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்கள்.

Published On :

எடப்பாடி பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, கரும்பு பயிா்கள் சேதமடைந்தன.

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் கோடை வெயிலைப் போல் சூரியன் சுட்டெரித்ததுடன், கடுமையான வெப்பமும் நிலவியது. இதனால் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசி வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், எடப்பாடி அருகேயுள்ள மொரசப்பட்டி, சித்தூா், அம்மங்குட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்தன.

அறுவடைக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருந்த நிலையில், பிஞ்சுகளுடன் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

மேலும், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.