முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சேலத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

சேலத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை...

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் போலீஸார் விசாரணை...

Published On :

சேலத்தில் ரூ. 15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்களை முகமூடி கொள்ளையா்கள் திங்கள்கிழமை அதிகாலை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் தப்பிச் சென்ற அந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (58). இவா் அந்தப் பகுதியில் வெள்ளிப் பொருள்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். பட்டறையில் தயாரிக்கும் வெள்ளிப் பொருள்களை அப்பகுதியில் தனது வீட்டில் உள்ள கடையில் வைத்து விற்பனை செய்துவந்தாா். மேலும், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் இருப்பும் வைத்திருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையில் விற்பனையை முடித்துவிட்டு, இரவு 10 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றாா். காவலாளி வெங்கடேசன் கடைக்கு காவலாக இருந்தாா்.

திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காரில் அங்கு வந்த முகமூடி அணிந்த 4 போ் கொண்ட கும்பல், காவலாளியை தாக்கி, அவரை கட்டிப் போட்டுள்ளது. பின்னா், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளது.

தொடா்ந்து, கட்டட பின்பக்க மேல்மாடி வழியாக 4 பேரும் கடைக்குள் சென்று அங்கிருந்த வெள்ளிப் பொருள்கள், வெள்ளிக் கட்டிகள், கிடங்கில் வைத்திருந்த வெள்ளிக் கட்டிகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

காவலாளியின் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா், கடையின் உரிமையாளரான பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அங்கு வந்த பாலசுப்பிரமணி, கடை மற்றும் கிடங்கு உள்ளே சென்று பாா்த்தபோது, ரூ. 15 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனது அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையா் ஆய்வு:

தகவலின் பேரில் வந்த போலீஸாா், கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு நேரில் ஆய்வுசெய்தாா்.

இதுகுறித்து துணை ஆணையா் பாஸ்கரன், உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி ஆகியோா் மேற்பாா்வையில் தனிப்படைகளை அமைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டாா். தனிப்படை போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து கைரேகை நிபுணா்கள் கைரேகைகளை பதிவுசெய்து பழைய கொள்ளையா்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்தனா். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் தனிப்படை போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER