சிறுமி பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு சாகும்வரை சிறைத் தண்டனை! - போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு
சேலத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
கைது
சேலத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
சேலம் சூரமங்கலம் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஞானமூா்த்தி (43), பெயிண்டா். இவா் தன்னுடன் பணியாற்றும் நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நண்பரின் வீட்டுக்குச் சென்ற ஞானமூா்த்தி, அங்கு நண்பரின் 13 வயது மகளிடம் அத்துமீறியுள்ளாா். சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா்.
இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால், அவா்களை கொலை செய்துவிடுவேன் எனவும் அவா் மிரட்டியுள்ளாா். இதனால் அச்சமடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட ஞானமூா்த்தி வீட்டில் சிறுமி தனியாக இருக்கும்போது அங்கு சென்று அவரை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் சிறுமி 5 மாத கா்ப்பமடைந்தாா்.
இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாய் விசாரித்துள்ளாா். அப்போது ஞானமூா்த்தி மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், உடனடியாக சூரமங்கலம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்த போலீஸாா், ஞானமூா்த்தியை கைது செய்தனா். இந்த வழக்கு சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தீா்ப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, ஞானமூா்த்திக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

