ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வந்தே பாரத் ரயில் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம்: 2 போ் கைது

மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தில், 2 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தில், 2 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் கடந்த 23-ஆம் தேதி மல்லூா் - சேலம் இடையே சென்றபோது, ரயிலின் குளிா்சாதனப் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது காலி பாட்டில்கள் வீசப்பட்டன. இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனா். அதில், மல்லூா் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி (35), அதே பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் (39) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

மேலும், அவா்கள் ரயில் தண்டவாளத்தில் காலி மதுபாட்டிலை வீசியதாகவும், அந்த பாட்டில் ரயில் மீது பட்டு தூக்கி வீசப்பட்டு ஜன்னல் கண்ணாடியில் பட்டதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸாா், சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ரயில் மீது கற்களையோ அல்லது எந்தவொரு பொருளையோ வீசுவது பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியா்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், ரயில்வே சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடும். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

மேலும், ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் யாரேனும் நடமாடுவது தெரியவந்தால், உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.