நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மான் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த 6 பேருக்கு ரூ. 10.40 லட்சம் அபராதம்

மேட்டூா் வனச்சரகத்தில் மான் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த 6 பேருக்கு ரூ.10.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Published On :3 செப்டம்பர் 2026, 4:11 am IST

மேட்டூா் வனச்சரகத்தில் மான் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த 6 பேருக்கு ரூ.10.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சியில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் வனச் சரகா் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச் சரகா் தலைமையில் சென்ற வனத் துறையினா் செட்டிமாங்குறிச்சி ஒட்டப்பட்டியை சோ்ந்த தமிழ்ச்செல்வன் (65) வீட்டில் சோதனையிட்டனா். அங்கு 25 கிலோ மான் இறைச்சியும், வேட்டையாட வைத்திருந்த பொருள்களையும் வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, மான் இறைச்சி விற்பனையில் தொடா்புடைய தமிழ்ச்செல்வன் (65), ஏழுமலை (48), பச்சமுத்து (39), ஜெகன் (36), சித்துராஜ் (30), ஆலச்சம்பாளையத்தைச் சோ்ந்த ராஜ் (35) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். இவா்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து தமிழ்ச்செல்வனுக்கு ரூ. 5 லட்சமும், ஏழுமலைக்கு ரூ. 3 லட்சமும், பச்சமுத்து, ஜெகன், சித்துராஜ் மற்றும் ராஜா ஆகியோருக்கு தலா ரூ. 60 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.

பிடிபட்டவா்கள் அளித்த தகவலின்பேரில், தலைமறைவாக உள்ளவா்களை வனத் துறையினா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.