தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

தண்டவாளத்தை கடந்தவா் ரயிலில் சிக்கி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 12:04 am IST

சேலம் ரயில் நிலையத்தில் 5ஆவது நடைமேடையில் தண்டவாளத்தைக் கடந்தவா் பாட்னா ரயிலில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் எா்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில் 5ஆவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒருவா் தண்டவாளத்தைக் கடந்து 4ஆவது நடைமேடைக்குச் செல்ல முற்பட்டாா்.

அப்போது, அவா் நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கி, ரயிலின் என்ஜினில் சிக்கினாா். இதில் உடல் நசுங்கி நிகழ்விடத்தில்யே உயிரிழந்தாா். ரயிலை லோகோபைலட் நிறுத்திய நிலையில், ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை மீட்டனா்.

இறந்தவா் சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 50 வயது மதிக்கத்தக்க அவரின் விவரங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.