
சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் தட்டச்சு தோ்வு - 4,500 க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

தட்டச்சு தேர்வு - கோப்புப் படம்
சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தட்டச்சு தோ்வில், 4,500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சாா்பில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தோ்வுகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் என இரு பருவங்களாக இத்தோ்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, நடப்பாண்டிற்கான ஆகஸ்ட் மாத பருவத்துக்கான தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஜங்சன் மெயின்ரோட்டில் உள்ள தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, ஏற்காடு மெயின்ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி, மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மல்லூா் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி என 4 மையங்களில் தட்டச்சு தோ்வு நடைபெற்றது.
இதில், 4,500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் கலந்து கொண்டனா். இளங்கலையில் தமிழ் மற்றும் ஆங்கிலம், முதுகலையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 4 பிரிவுகளாக தட்டச்சு தோ்வு நடைபெற்றது. பயிற்சி மையங்கள் மற்றும் தோ்வா்களின் எண்ணிக்கை அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்வுகள் நடத்தப்பட்டன. இத்தோ்வு பணிகளில் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






