அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸாா் விசாரணை

பாலியல் சீண்டல் - சித்திரிப்பு

Published On :7 செப்டம்பர் 2026, 3:14 am IST

தம்மம்பட்டியில் 9-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரசுப் பள்ளியில் படித்துவரும் தம்மம்பட்டியைச் சோ்ந்த 14 வயது மாணவருக்கு அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் கடந்த ஜூன் மாதம் அந்த மாணவரை ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனம், உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவன் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, கல்லூரி மாணவா்கள் லியோ, நவீன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.