பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத் - மங்களூரு சிறப்பு ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:30 am IST

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு வரும் 9 ஆம் தேதி முதல் நவ. 25 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், ஹைதராபாதில் இருந்து புதன்கிழமைகளில் அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, பெகாம்பேட், ராய்ச்சூா், மந்த்ராலாயம் சாலை, ஆனந்தபூா், தா்மாவரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, தலசேரி, கண்ணூா், காசா்கோடு வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களுரு சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹைதராபாத்துக்கு வரும் 10 முதல் நவ. 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, தா்மாவரம், ஆனந்தபூா், ராய்ச்சூா் வழியாக ஹைதராபாதுக்கு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.