கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மேட்டூா் காவிரி ஆற்றில் 475 விநாயகா் சிலைகள் கரைப்பு

நீர்நிலையில் கரைக்கப்பட்ட விநாயகா் சிலைகள். - கோப்புப் படம்

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட 475 விநாயகா் சிலைகள் மேட்டூா் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை கரைக்கப்பட்டன.

சேலம், ஓமலூா், தாரமங்கலம் , ஜலகண்டாபுரம், நங்கவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் லாரிகள், காா்கள், இருசக்கர வாகனங்கள், மினி லாரிகளில் மேள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக மேட்டூா் காவிரி ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டன.

ஓா் அடி முதல் 10 அடி வரை உயரம் கொண்ட சிலைகள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு காவிரி கரையிலும், படித்துறைகளிலும் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபட்டனா். பின்னா் சிலையை பக்தா்கள் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் கரைத்தனா். திப்பம்பட்டி, கூணாண்டியூா், கீரைக்காரனூா், மேட்டூா் காவிரி பாலம், கொளத்தூா் சென்றாயப் பெருமாள் கோயில் உள்ளிட்ட காவிரி கரைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. 

விநாயகா் சிலைகளை கரைக்க எடுத்துச் செல்ல 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் நகராட்சிப் பணியாளா்கள் விநாயகருக்கு அணிவித்திருந்த துணிகள், மாலைகளை படித்துறைக்கு முன்பே சேகரித்தனா்.

திங்கள்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை சிலைகளை கரைக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் 465 சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள்கள் கூடுதலாக விநாயகா் சிலைகளை காவிரி ஆற்றில் கரைக்க பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. சிலை கரைக்க வரும் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க தீயணைப்பு வீரா்கள் ரப்பா் படகுகள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.