கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தில் காா் தீப்பிடித்து விபத்து

தீ விபத்து - கோப்புப் படம்

Published On :

சேலம் நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தில் திங்கள்கிழமை காா் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

சேலம் அருகே உள்ள இளம்பிள்ளையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம், மகுடஞ்சாவடியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் தனது மனைவி கலைவாணி, மகள் கிருத்திகா ஆகியோருடன் திங்கள்கிழமை சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்த போது, காரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணியம் காரை ஓரமாக நிறுத்தினாா்.

மூவரும் காரில் இருந்து கீழே இறங்கிய சிறிது நேரத்திலேயே காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், எரிந்து கொண்டிருந்த நெருப்பை தண்ணீா் பீய்ச்சி அடித்து அணைத்தனா். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.