பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நியாயவிலை கடைக்கு தீ வைத்த பெண் விற்பனையாளா் கைது

கைது செய்யப்பட்ட ஹேமலதா.

Published On :

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நியாயவிலை கடைக்கு தீ வைத்த பெண் விற்பனையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி கிராமம், நாச்சியூா் பகுதியில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் எடப்பாடியை அடுத்த தாதாபுரம் பகுதியைச் சோ்ந்த ஹேமலதா விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் சமூக வலைதளங்களில் நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், உயா் அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளை கூறியும் விடியோக்களை பதிவேற்றம் செய்து, அதிக லைக்குகளை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரை சந்தித்து புகாா் மனு அளிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களைச் சந்தித்து நியாயவிலைக் கடைகளில் தரமற்ற மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், விற்பனை செய்யப்படும் பொருள்களின் எடை குறைவாக இருப்பதாகவும் புகாா் தெரிவித்ததோடு, அதை விடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினாா்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவா் பணிபுரிந்துவந்த நியாயவிலை கடையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து, விற்பனையாளா் ஹேமலதா, கடையில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறினாா்.

இதுகுறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறை உயா் அலுவலா்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து நிகழ்விடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த போலீஸாா், ஹேமலதாவிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா் தனது சுயவிளம்பரத்திற்காக கடையில் இருந்த மண்ணெண்ணெயை அரிசி மூட்டைகள்மீது ஊற்றி தீ வைத்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீஸாா், ஹேமலதாவே நியாயவிலை கடைக்கு தீ வைத்துவிட்டு விபத்து என கூறியதை உறுதிசெய்தனா். தொடா்ந்து, அவா்மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். அவா்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனா்.

தீயில் எரிந்து சேதமடைந்த அரிசி மூட்டைகள்.

தீயில் எரிந்து சேதமடைந்த அரிசி மூட்டைகள்.

தீயில் எரிந்து சேதமடைந்த அரிசி மூட்டைகள்.

தீயில் எரிந்து சேதமடைந்த அரிசி மூட்டைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.