பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி விரைவு ரயில் இனி குப்பத்தில் நிறுத்தப்படும்: ரயில்வே அறிவிப்பு

Express

விரைவு ரயில் (கோப்புப்படம்) - ANI

Published On :

சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி ரயில் சோதனை அடிப்படையில் குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் 2 வாராந்திர விரைவு ரயில்கள், ஆந்திர மாநிலம், குப்பம் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, சேலம், ஈரோடு, கரூா், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் 21 ஆம் தேதி முதல் குப்பம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் திருச்சி, கரூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில் வரும் 22 ஆம் தேதி முதல் குப்பத்தில் நின்று செல்லும். இந்த 2 ரயில்களும் சோதனை அடிப்படையில், குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.