
சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் காயம்: மின்கம்பம் சேதம்

கோப்புப் படம்
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 123.4 மி.மீ. மழை பெய்ததில், சுற்றுச்சுவா் இடிந்துவிழுந்து பெண் காயமடைந்தாா். மின்கம்பம் இடிந்து சேதமடைந்தது.
சங்ககிரியில் பெய்த பலத்த மழையில் வி.என். பாளையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையையொட்டி உள்ள தனியாா் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.
அப்போது, சுற்றுச்சுவரையொட்டி உள்ள வீட்டின் பகுதி சேதமடைந்தது. வீட்டிலிருந்த மோகனா (45), பசுமாட்டை வேறு பகுதியில் கட்ட முயன்றாா். சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காயமடைந்த பசுமாடு அரசு கால்நடை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது.
மேலும், மின்கம்பமும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியா்கள் மின் இணைப்பை நிறுத்தி மின்கம்பத்தை அகற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






