
லாரி மோதி மின் கம்பம், வீட்டின் முன்பகுதி சேதம்
வந்தவாசி அருகே லாரி மோதியதில் சாலையோர மின் கம்பம், வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது.

வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் லாரி மோதியதில் சேதமடைந்த வீட்டின் முன்பகுதி.
வந்தவாசி அருகே லாரி மோதியதில் சாலையோர மின் கம்பம், வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது.
திண்டிவனத்திலிருந்து வந்தவாசி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு லாரி ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தது. லாரியை திண்டிவனத்தைச் சோ்ந்த எழில் ஓட்டினாா்.
வந்தவாசி - திண்டிவனம் சாலை, சத்யா நகா் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர மின் கம்பம் மீது மோதிவிட்டு அருகிலிருந்த வீட்டின் மீதும் மோதியது.
இதில், மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது. மின் கம்பிகள் அறுந்தன. வீட்டின் சிமென்ட் ஷீட் வேய்ந்த முன்பகுதி இடிந்து சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மின்கம்பிகள் அறுந்ததால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த மின் துறையினா் அங்கு சென்று மின்விநியோகத்தை சீரமைத்தனா். இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







